வீரத்தமிழர் முன்னணி

தமிழர் மெய்யியல்

வட மொழி தாக்கதிலிருந்து நம் இறை வழிபாட்டை மீட்டெடுக்க நம் சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் இயற்றிய பாசுரங்களையும், செய்யுள்களையும் கொண்டு அமெரிக்கா தமிழர்களின் நற்காரியங்களுக்கு தமிழ் முறையில் பூசைகள் செய்ய உதவும் திட்டங்கள் மற்றும் செயல்கள், வகுப்புகள்.

தமிழர் வரலாறு

எமது இனவரலாறு, எமது முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்படும்.

தமிழர் வாழ்வியல்

சிலம்பம், அடிமுறை, ஓகம் போன்ற தமிழர் வாழ்வியல் கலைகளை கற்றுக் கொடுப்பது.

தமிழர் இசையியல்

பறையிசை மற்றும் கிராமிய இசைகளை நம் அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பதில் உதவி.

தமிழர் ஆவணங்கள்

வேல்வீச்சு என்ற மாத இதழ் மூலம் தமிழர் சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று ஆவணப்படுத்துவது.

You cannot copy content of this page