வீரத்தமிழர் முன்னணி

          சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்ற நூல் வகையாகும். சிவாலயங்களில் செய்யப்படும் அனைத்தும் சைவ ஆகமங்களைப் பின்பற்றியே செய்யப்படுகின்றன. சிவாச்சாரியார்களை தேர்ந்தெடுத்தல் முதற்கொண்டு அனைத்தும் இதில் அடங்குகின்றன.

         மாணிக்கவாசகர் ஆகமம் ஆகி நின்று அன்னிபான் எனவும் மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும் எனப் பாடுகின்றார்.

       திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே என்ற குறிப்பு தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே என்றும் கூறுகின்றார். அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார்.

You cannot copy content of this page