Veerathamilar Thirumandram

தமிழ்த் தாய்

                     தமிழ்த் தாய், தமிழன்னை, தமிழணங்கு  என்பது தமிழை அன்னை வடிவாக உருவகப்படுத்தி பாவித்தலைக் குறிப்பதாகும். தமிழ்த் தாய் என்ற சொல் நூற்றாண்டுகள் கடந்ததாகும். தமிழத் தாய் தான் இப்போது இழி நிலையில் உள்ளதாக தன் பிள்ளைகளான தமிழர்களிடம் புலம்புவதாக சுப்பிரமணிய பாரதி பாடியுள்ளார்.  தமிழ்ன்னையின் ஓவியத்தை காரைக்குடி கம்பன் விழாவின்போது வரையப்பட்டு மேடையில் வைக்கப்பட்டது. அந்த ஓவியத்தை கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் விருப்பப்படி எஸ். கருப்பையா என்ற ஓவியர் வரைந்ததாகும்.

தோற்றம்
கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் விருப்பப்படி எஸ். கருப்பையா என்ற ஓவியர் வரைந்த தமிழன்னை வெள்ளைத் தாமரை மலரில் அமர்ந்தவாறும், நான்கு கரங்களுடனும், ஒரு கை யாழிசைக்க, மறுகை சுவடி ஏந்திய நிலையில் இருக்க, பின்னிரு கைகள் சுடரும், ருத்திராட்சமும் ஏந்தி இருப்பதுபோன்று வரையப்பட்டிருந்தது. இதே வடிவத்துடன் தமிழ்த்தாய் கோயிலில் அமைக்கப்பட்ட தமிழன்னையின் உருவம் கல்லில் வடிக்கப்பட்டது.

Copyright © 2023 வீரதமிழர் திருமன்றம்- அமெரிக்கா​

You cannot copy content of this page