Veerathamilar Thirumandram

                                                                                                       யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

            தமிழினம் ,  மனிதர்களின்,  காலை , இலக்கியம்  மற்றும்  பண்பாடுகளின் பொக்கிஷம்.  உலகத்தில், மிகவும்  தொன்மையான, போற்றி பாதுகாக்க படவேண்டிய, இனம் தமிழ் இனம். இன்று அது என்றும் இல்லாத அளவுக்கு அழிவின் பாதையில் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக உணருகிறேன். உண்மையில் கணியன் சொன்னது என்ன ? அது எவ்வாறு திரிக்க பட்டு , தமிழர்களை வீழ்த்த,  ஒரு ஆயுதமாக இன்றுவரை பயன்படுத்த படுகிறது.

 

          கணியன் சொன்னதாக, பிழையாக,   உலவிவரும் கூற்று இதோ , ” யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்”.   அதாவது , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள்,  “ஏவூராயினும் அது எம் ஊரே ; யாராயினும் அவர் எம் உறவினரே”, 

 

இந்த கூற்றை , நான் பலர் கூறி கேட்டு இருக்கிறேன், நல்ல படித்தவர்கள் கூறி கேட்டு இருக்கிறேன்,   இந்த ஒரு  கூற்றில் உள்ள    பிழையை, வினையை, நஞ்சை   நான் அன்று உணரவில்லை ஆனால் இன்று அதை நன்கு உணருகின்றேன்.  

 

தமிழர்களின் மமதை, ஆட்சி இழப்பு, அதிகார இழப்பு, வறுமை, அறியாமை இதன்  காரணமாக , வரலாறை மறந்த ஒரு இனமாக மாறிப்போனார்கள் தமிழர்கள் , சிந்திக்கும் திறனை இழந்தார்கள்,  இதன் காரணமாக, வந்தான் போனவன்  எல்லாம் விளக்க ஊரை எழுத வேண்டிய நிலை,   அதன் விளைவு ,  வரலாற்றின் வழிநெடுக , திரிக்க பட்ட வரலாறும் ,  மறைக்க பட்ட வரலாறும், நம்மால் காண முடிகிறது.

 

வெளிநாடுகளில் வாழும்  தமிழர்களில் பலபேர், தங்களை ஒரு, தமிழன் என்றே தெரியாமல்,  வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.  பலர், இன்று தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை காணுகிறார்கள்.  பகலவனின் ஒளி கற்றைகள் பட்ட  பிறகே,  சூரியனின் ஒளி கற்றைகள் பட்டு பனி கரைவது போல, தன்னை சூழ்ந்து இருந்த மாயை  கரைய , தமிழன் என்கிற உணர்வு பெற்றோம்.    விளைவு,    முளைக்கும் விதை, தண்ணீரை தேடி ஓடுவது போல,  தமிழனின் பேச்சில்,  தெளிவு பெற்ற தமிழர்கள் வரலாற்றை நோக்கி ஓட தொடங்கிவிட்டார்கள்..    

 

உலகத் தமிழர்கள், குழந்தைகள் ,  அதி உன்னதமான பேச்சால் தெளிவு பெற்று வருகிறார்கள்.  நாம் இன்று வரை,   யூகம் கடந்து , பனிப்  பாறைக்குள் உறங்கும் விதைகள் போல , உறங்கிக்கொண்டு இருந்து விட்டோம் ,  இனி , பகலவனை  கண்டா விதைகள் போல, சீன மூங்கில்கள் போல, வீரியம் கொண்டு எழுவோம்.   இந்த உலகத்தில், நமது இந்திய திருநாட்டில், மற்ற சமூகங்கள், எப்படி , தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறார்களோ,  அதே போல நாமும், நமது ,  பாதுகாப்பை உறுதி செய்து வாழ பழகுவோம் .  

 

                                 உன் மொழி அழிந்தால், நீ அழிவாய், எனவே உன் மொழியை பாது காத்துக்கொள் .

                                 உன் நிலம் அழிந்தால் ,  நீ அழிவாய்,  எனவே உன் நிலத்தை பாது காத்துக்கொள்.  

                                 உன் தொழில் அழிந்தால் ,  நீ அழிவாய்,  எனவே உன் தொழிலை  பாது காத்துக்கொள்.

 

உன் தேவைகளை , உன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும், அப்படி செய்ய தவறினால் , நீ உன்னை,  மாய்த்து கொள்ள துணிந்து  விட்டாய் என்று பொருள்.  உன்னை இன்னொருவன் பாதுகாப்பான் என்று நீ  நம்புவது, நீ இன்னொருவளுக்கு இறையாகி/உணவாகி   விட்டாய் என்று பொருள்.  இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர் களுக்கும், தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு , அதுபோல, நீ உன்னை பாதுகாத்து கொள்ள , உனக்கு முழு உரிமை உண்டு.     

 

இந்த உலகத்தில், எது ஒன்றும் இலவசம் இல்லை .  இந்த உலகத்தில் வெற்று இடம் ஒன்று இல்லவே இல்லை , காற்று அதை நிரப்பி விடும்.   இயற்க்கை, நீ செய்ய தவறியதை,   இன்னொருவனை வைத்து , பூர்த்தி செய்து கொள்ளும், ஆகவே நீ வேலை செய்ய தயங்காதே.  உன் வேலை, பறிபோகிறது என்றால் , உனக்கான அதிகாரம் இங்கு இல்லை என்று பொருள்,   உனக்கான அரசு இங்கே இல்லை என்று பொருள். 

 

சோம்பல் சோறு போடாது.  உன்னை ஒருவன் சோம்பேறி என்கிறான் என்றால்,  அவன் உன்னை தவிர்க்கிறான் என்று பொருள், அவன்  உன் இடத்தை நிரப்ப துடிக்கிறான்  என்று பொருள்.  நீ உன் வாழ்வாதாரத்தை இலக்கின்றாய் என்று பொருள்.  நீ மாற்று இடத்தை நோக்கி பயணிக்கும் நிலை வந்துவிட்டது என்று பொருள் .  உனக்கான பாதுகாப்பு இங்கு இல்லை என்று பொருள்.  

 

இவை அனைத்தும், இப்படி இருக்க, இதோ இங்கே நான் கேட்கிறேன்,  எந்த இடத்தில கணியன் , “ஏவூராயினும் அது எம் ஊரே” என்று சொல்லி இருக்கின்றார்?, அவர் அபப்டி எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை,  கயவர்கள் ,  தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள, அவர் சொல்லி இருப்பதாக,   ஒரு பொய்யான விளம்பரத்தை செய்கிறார்கள்.   அவர் சொல்லி  இருப்பதாக நான் உணருவது,  இதோ “யாதும் ஊரே , யாவரும் கேளிர்” .  இதன் பொருள்,    “உலகத்தறே, உலகத்து மக்களே கேளுங்கள், உலகத்தி எங்கு சென்றாலும்  மக்கள் அனைவரும்  ஒன்றுபோலதான் இருக்கிறார்கள், மக்கள் மக்களாகத்தான் வாழ்கிறார்கள் , உலகத்தில் எங்கு சென்றாலும் மக்கள் கூடிதான் வாழ்கிறார்கள்,  நமக்கு ஒரு வாழ்வியல் இருப்பதுபோல, அவர்களுக்கு என்று ஒரு  வாழ்வியல் இருக்கிறது ,  மொழி இருக்கிறது, கல்வி இருக்கிறது  , கலாச்சாரம் இருக்கிறது , அவர்களும்,  மனிதர்கள் தான்,  நமக்கு இருக்கும் அத்துணை குணாதிசயங்களும் அவர்களுக்கும்இருக்கிறது,  ஆகவே அவர்களும் நம்மை போல மக்களே, நாம் அவர்களை  மதித்து , ஒற்றுமையாக , வாழ வேண்டும்”.   என்பதுதானே பொருள்?  அபப்டி இருக்க ,   எங்கே, எந்த இடத்தில, கணியன்,  “ஏவூராயினும் அது எம் ஊரே”  என்று  கூறி இருக்கிறார்.எந்த இடத்தில் நமக்கான அதிகாரத்தை இழக்க சொல்லி இருக்கிறார், எந்த இடத்தில ,  நமக்கான வாழ்வாதாரத்தை இழக்க சொல்லி இறுகிர்றார், எந்த இடத்தில, நமக்கான  வரலாற்றை  தொலைக்க சொல்லியிருக்கிறார்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”,  என்பது , உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் உன்னை போன்றவர்களே,  அவர்களிடம் பகைமை பாராட்டாதே , அவர்களை அன்பு பாராட்டி , அரவணைத்து வாழ் என்பதாகும்.  தன் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை தொலைத்து வாழ்  என்று பொருள் ஆகாது.

 

நம்மை,  தப்பு, தப்பாக,  படிக்க வேதத்தின், விளைவு,  தமிழகம் இன்று, வந்தான் போனவன்,  வேட்டை காடாக மாறிவிட்டது,  நமது மொழிக்கும் , மக்களுக்கும்  பாது காப்பு இல்லை ,  நமக்கு தொடர்பு இல்லாதவர்கள் ,  கையில்  ஆட்சி அதிகாரம்.

 

“வீட்டுக்கும் , நாட்டுக்கும் வேறுபாடு இல்லை “.   இந்த உண்மையை எப்போது , எப்படி உணரப்போகிறோம். வீடு என்பதும், நாடு என்பதும் வெறும் எழுத்து இல்லை , அது உன் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆயுதம், சாதனம்.

 

                                                      இதை உணர்ந்தாள் உண்டு வாழ்வு , இல்லையேல் உண்டு தாழ்வு.

Copyright © 2023 வீரதமிழர் திருமன்றம்- அமெரிக்கா​

You cannot copy content of this page